மதுரை விமான நிலையத்தில் திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம்.. நிதியமைச்சர் கார் மீது காலணியை வீசி எறிந்ததால் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காஷ்மீரில் உயிரிழந்த வீரர் லட்சுமணன் உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலான பாஜகவினர் வந்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின் பாஜகவினரை அனுமதிக்குமாறு கூறியதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட அமைச்சரின் காரை வழிமறித்த சிலர், காலணியை வீசி எறிந்ததால் பரபரப்பு நிலவியது.முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்கிவிட்ட நிலையில், அமைச்சரின் காரை சிலர் விரட்டிச் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
Comments