போலீஸ் எனக்கூறி மூதாட்டியின் வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கைது.!

0 3235

திருப்பூர் பெருமநல்லூர் அருகே போலீஸ் எனக்கூறி மூதாட்டியின் வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 

கணக்கம்பாளையத்தை சேர்ந்த அபிராமி என்ற மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மதியம் இருவரும் வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மஃப்டியில் வந்துள்ள போலீஸ் என்றும் சந்தேகம் இருப்பதால் வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் கூறி உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சியின் உதவியுடன் வாகன பதிவெண்ணைக் கொண்டு 5 பேரையும் கைது செய்து போலீசார், பணத்தை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments