கல்வி, மருத்துவத்திற்கான செலவுகள் ஒருபோதும் இலவசங்கள் ஆகாது - முதலமைச்சர்.!

0 3705

கல்வி, மருத்துவத்திற்கு அரசு செலவு செய்வது ஒருபோதும் இலவசம் ஆகாது என்றும், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம் போன்றவை சமூக நலத்திட்டங்களே என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக, கொளத்தூர் டான்போஸ்கோ பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் வழங்கினார். விழாவிற்கு வருகை தந்தபோது, சாலையோரம் நின்ற மாணவிகளுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார்.

மேலும், பெரம்பூர் ஜமாலியா, திரு.வி.க நகர், பேப்பர் மில்ஸ் சாலை, கொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments