தட்டச்சு பிழை காரணமாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய இளைஞர்.. ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

0 3984

தட்டச்சு பிழை காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய இளைஞருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மகாராஷ்டிர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படையால் கைதான நைஜீரிய இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கோகைகன் இல்லை என தடயவியல் ஆய்வகத்தின் பகுப்பாய்வில் தெரியவந்தது.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது தட்டச்சுப் பிழை காரணமாக இந்த தவறாக நிகழ்ந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, நைஜீரிய இளைஞரை ஜாமினில் விடுவிக்க தகுதியானவர் எனக்கூறி மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments