தமிழகத்தில் 5 நாட்களுக்கு இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்!

0 2361

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments