உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து.. 11 பேரின் சடலங்கள் மீட்பு.!

0 2277

உத்திர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 11ம் தேதி மார்கா பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகுதிக்கு 30க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு பலத்த காற்றின் காரணமாக ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர் நேற்று 3 பேரை சடலமாக மீட்ட நிலையில், இன்று மேலும் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமானவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments