வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது - கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்

0 4855

கடன் வசூலிப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடன்மீட்பு நடவடிக்கையின்போது உடலளவிலோ மனத்தளவிலோ துன்புறுத்தக் கூடாது என்றும், பொதுவெளியில் அவமானப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கடன் தவணையை செலுத்துமாறு காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்கு பிறகும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் அவர்களின் தனியுரிமையில் தலையிடக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments