பாக்.தீவிரவாதி ராஃப் அசாரின் சொத்துகளை முடக்க சீனா முட்டுக்கட்டை

பாகிஸ்தான் தீவிரவாதி ராஃப் அசாரின் சொத்துகளை முடக்க விடாமல் ஐநா.சபையில் சீனா தடையாக இருப்பது தேவையற்ற செயல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரின் தம்பி ராஃப் அசார். இவரின் சொத்துகளை முடக்கவும் சர்வதேச பயணத்துக்கு தடைவிதிக்கவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐநா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் இதனை சீனா எதிர்த்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, இந்தியாவும் அமெரிக்காவும் தீவிரவாதியாக அடையாளம் கண்ட நபருக்காக சீனா தொழில்நுட்பக் காரணத்தைக் கூறி தடையாக இருப்பது தேவையற்ற செயல் என்றார்.
Comments