நீதிமன்றத்தில் ஆஜராக சென்றவர்களை கொலை செய்ய ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த 3 பேர் கைது

0 4440

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே நீதிமன்றத்திற்கு சென்றவர்களை கொலை செய்ய காத்திருந்ததாக 3பேர் கைதாகினர். 

மூவரசன்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரனை கடந்த வருடம் அதே பகுதியில் தொண்டை அப்புன் மற்றும் பாம் கணேசன் ஆகியோர் வெட்டி கொலை செய்த து தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இந்த இருவரும் மற்றொரு வழக்கிற்காக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு ஆஜராவதற்காக சென்றதை அறிந்த ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் 3பேர் நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் நீதிமன்றம் போகும் வழியில் அவர்களை கொல்வதற்காக பொத்தேரி ரயில் நிலையம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் 3பேரும் காத்திருந்த போது போலீசாரிடம் சிக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments