சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மூவர்ண நிறத்தில் ஜொலித்த சென்னை, மும்பை, டெல்லி வரலாற்று சின்னங்கள்

0 2655

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முக்கிய நகரங்களில் பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மூவர்ண மின்னொளியில் ஜொலித்தன.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம், சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் போன்ற கட்டடங்களில் மூவர்ணத்தில் மின் விளக்குகள் மின்னுகின்றன.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மாநகராட்சி கட்டடம், சட்டமன்றம் அமைந்துள்ள மந்த்ராலயா, எல்.ஐ.சி ஆகியவை மின்னொளியில் ஜொலித்தது.

லக்னோவின் கட்டடங்களும் இதே போல் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் போன்ற கட்டடங்களிலும் அழகான மின்விளக்குகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரகாசமாக காட்சியளித்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments