சுங்கச்சாவடி பகுதியில் காவலரை கத்தியால் வெட்டி கஞ்சா மாமூல் ரவுடி அட்டூழியம்..!

0 3700
சுங்கச்சாவடி பகுதியில் காவலரை கத்தியால் வெட்டி கஞ்சா மாமூல் ரவுடி அட்டூழியம்..!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகனங்களை நிறுத்தி தேனீர் அருந்துவோரை மிரட்டி கஞ்சா கேடி ஒருவன் மாமூல் கேட்டு காவலரை பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டு ஓடிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி பகுதியில் தாம்பரம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள டீக்கடையில் தேனீர் அருந்துவதற்காக வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை நிறுத்தி இருந்தனர்.

அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த சுள்ளான் போன்ற இளைஞர் காரில் இருந்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளான். சிலர் 10 ரூபாய் 20 ரூபாய் வரை கொடுத்த நிலையில் சாதாரண உடையில் ஒரு காரில் அமர்ந்திருந்த காவலர் அருணிடம் மாமூல் கேட்க , நானே போலீஸ் என்கிட்ட மாமூல் கேட்கிராயா ? தரலன்னா என்னடா செய்வ ? எனக் கேட்க அந்த இளைஞர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 2 அடி நீளக் கத்தியை எடுத்து அருணின் தோள்பட்டையில் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளான்

இதையடுத்து ஆவேசமாகி காவலர் அருணும் அருகில் இளநீர் கடை வைத்திருப்போரும் சேர்ந்து விரட்டிச்சென்று போதை இளைஞரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் மித மிஞ்சிய கஞ்சா போதையில் காணப்பட்ட அவன் அரைவெட்டு சுதர்சன் என்பது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து சுவரில் மோதிய அவனது அட்டூழியத்தை கண்டு போலீசாரே ஒரு நிமிடம் திகைத்து போனதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா தடையின்றி கடத்தப்படுவதால், அதனை வாங்கி புகைத்துவிட்டு பாதி மிருகமாக போதையர்கள் வலம் வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments