திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளை கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை!
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, தாம்பத்ய உறவு வைத்துவிட்டு ஏமாற்றியதால், +2 படித்த சிறுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
தர்மபுரி சின்னமாட்டுக்கடை பகுதியை சேர்ந்த சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி முனிரத்தினம் நெருக்கமாக பழகியுள்ளார்.
ஆனால், சொன்னப்படி திருமணம் செய்துக்கொள்ளாமல் முனிரத்தினம் தட்டிக்கழித்து வந்ததால், மனமுடைந்த அந்த சிறுமி வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
தீ எரியும்போது, அலறியடித்துக் கொண்டு, அருகில் தண்ணீர் தொட்டி பக்கம் ஓடி, தண்ணீரை ஊற்றி, அணைத்துள்ளார். ஆனால் தீ உடல் முழுவதும் பரவி, சிறுமி சென்ற வழியெல்லாம் சாம்பல் கிடந்துள்ளது.
இதில் படுகாயமடைந்து சிறுமி அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் வழியில் துடிதுடித்து கிடந்துள்ளார். சிறுமியின் தாய் ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு தீக்காயங்களுடன், கருத்த மேனியுடன் அமாந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அலறியுலள்ளார்.
108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய மாமாவிடம் தண்ணீர் கேட்கும் வீடியோ பார்ப்பவரின் கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைத்தது. அந்த சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் முனிரத்தினத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments