ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.5.56 கோடி மோசடி செய்த வழக்கு: உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை.. ரூ.5.6 கோடி அபராதம்!

0 2904

ஈரோடு அருகே ஈமு கோழி பண்ணை நடத்தி ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதன் உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5 கோடியே 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை டான்பிட் (Tanpid Court) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஈமு கோழி பண்ணை மோசடியில் 140 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக காட்டூர் ராஜா நகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், எட்டு ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments