மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி உருட்டு கட்டையால் அடித்துக் கொலை.!

நாகை அருகே, மகனை அடிக்க பாய்ந்த கணவனை தடுத்த மனைவி உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூண்டியைச் சேர்ந்த கார்த்தி - ரேவதி தம்பதியினர் தங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில், சம்பவத்தன்று உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற மனைவி ரேவதி, வீட்டுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
ஆடுமாடுகளுக்கு தீனி வைக்காததால் ஆத்திரத்திரத்தில் இருந்த கணவர் கார்த்தி, பராமரிக்க தவறிய தனது மகன்பிரசாந்தை உருட்டு கட்டையால் அடிக்க பாய்ந்துள்ளார்.
அப்போது குறுகே விழுந்து தடுத்ததால் ரேவதிக்கு தலையில் அடி விழுந்தது. இதில் ரேவதி பலியான நிலையில் கணவர் கார்த்தியை போலீசார் கைது செய்தனர்
Comments