பள்ளி மாணவிகளை மிரட்டி மது குடிக்க கட்டாயப்படுத்திய இளைஞரை கைது செய்த போலீஸ்!

0 3634

கரூரில், பள்ளி மாணவிகளை மிரட்டி மது குடிக்க வைத்த விவகாரத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 10-ம் தேதி, சர்ச் கார்னர் பகுதியில் மதுபோதையில் இருந்த இரு மாணவிகளை மீட்ட மகளிர் போலீசார், பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாணவி ஒருவரின் தாய் அளித்த புகாரில், தனது மகள் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்ததால், பசுபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வு எழுத சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு முடிந்த பிறகு, தனது ஆண் நண்பர் வீட்டுக்கு இரு தோழிகளுடன் மாணவி சென்ற நிலையில், மூவரையும் இளைஞர் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மது குடித்த மாணவிகள் வாந்தி மயக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, மாணவிகளை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments