திரையரங்கு ஊழியரைத் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய 2 பேர்... பரபரப்புக் காட்சி

0 7598


புதுச்சேரியில், திருட்டு வழக்கில் சிறை சென்றுவந்ததை சுட்டிக்காட்டி கிண்டலடித்த நபரை அவரது நண்பர்கள் 2 பேர் பொதுவெளியில் வைத்து கத்தியால் வெட்டினர்.

சண்முகாஸ் திரையரங்கில் கேண்டீன் பொறுப்பாளராக பணியாற்றி வந்த ரஞ்சித் என்பவரை திரையரங்கு வாசலில் வைத்து 2 பேர் துரத்தி துரத்தி அடித்து, கத்தியால் வெட்டினர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்பதும், சில மாதங்களுக்கு முன் திருட்டு வழக்கில் சிறைதை ரஞ்சித் அக்கம்பக்கத்தினரிடம் கூறி கிண்டலடித்ததால், அவரை மிரட்டுவதற்காக கத்தியால் வெட்டியதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments