யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 13 பேர் மீட்பு.. 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

0 6489
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 13 பேர் மீட்பு.. 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கா பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகுதிக்கு 30க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு, நேற்று பலத்த காற்றின் காரணமாக எழுந்த பெரும் அலைகளால் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கியதாகவும், 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான காரணம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments