நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன்..!

0 11107
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன்..!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் கடப்பாரையால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தார். 

கலெடிபேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்த ரமேஷ்- அலமேலு தம்பதியினருக்கு மோனிஷா, வசுந்த்ரா என 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம்  அந்த வீட்டில் இருந்து அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் அலமேலு இறந்து கிடந்தார்.

இதற்கிடையில் அங்கிருந்து தப்பிச் சென்ற ரமேஷ் நேராக போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கடப்பாரையால் அடித்து ரமேஷ் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments