கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.10ஆயிரம் திருட்டு... சிசிடிவி உதவியுடன் 2இளம்பெண்கள் கைது

0 9997

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 10 ஆயிரம் ரூபாய் திருடிய 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

காமராஜர் நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கடந்த மாதம் 30ந்தேதி கோவில்பட்டி செல்வதற்காக விளாத்திகுளம் பஸ் நிலையத்திற்கு சென்ற போது அவர் வைத்திருந்த 10ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.

போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்ததில்  2 இளம்பெண்கள் பணப்பையை திருடி செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா, சந்தனமாரி ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments