பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த திட்டதை தடுத்து நிறுத்திய சீனா.. கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா ..!

0 10200
பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த திட்டதை தடுத்து நிறுத்திய சீனா.. கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா ..!

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் சீனா தடுத்து நிறுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப்புக்கு தடை கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டன.

இந்த முயற்சிக்கு ஆதரவாக 14 நாடுகள் முன்வந்தபோதும், இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தனது வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது.

இதேபோல், கடந்த ஜூன் மாதம் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை கூட்டாக பரிந்துரை செய்தன.

அப்போதும் சீனா கடைசி நேரத்தில் நிறுத்திவைத்தது. இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியபோது சீனா முட்டுக்கட்டை போட்டது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ருச்சிரா காம்போஜ் பயங்கரவாதிகள் மீதான தடுப்பு நடவடிக்கையை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி நிறுத்தி வைப்பது முடிவுக்கு வரவேண்டும் எனவும், தடுப்பு கமிட்டி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட பரிந்துரை முறையான காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நிலைப்பாடு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என்றார்.

சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடும்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ருச்சிரா காம்போஜ் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments