பைக்கில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

0 1388
பைக்கில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா- முத்தமிழ் தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி, திருவள்ளூர் அடுத்த கேஜி கண்டிகையில் உள்ள பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுதிய முத்தமிழ், கணவர் மற்றும் குழந்தைகளுடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி அனைவரும் கீழே விழுந்ததில் முத்தமிழின் 7 மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments