அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

0 1595
அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் 2வது நாளாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஓராண்டுக்கு முன் எப்படி பதவிகள் காலாவதி ஆனது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடைமுறைக்கு பொதுக்குழு ஒப்புதல் தராததால் பதவிகள் காலாவதியாகின்றன என்றும், தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார்கள் என்றும் தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்ததாக இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்.-இன் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும் என்றும் இ.பி.ஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments