ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம்

0 1570
ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

அதிகாலையில் தர்ஹால் பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். உடனடியாக வீரர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த லக்ஷ்மணன் என்ற ராணுவ வீரரும் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் வீர மரணமடைந்தனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments