சாலையை கடக்க காத்திருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சி..!

0 1369
சாலையை கடக்க காத்திருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சி..!

திருவள்ளூர் சி.வி.என் சாலையில், சாலையை கடக்க காத்திருந்த பெண்ணிடம் 2 மர்மநபர்கள் செயினை பறித்து சென்ற சிசிடிவிக் காட்சி  வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிஜிஸ்டர் ஆக பணி புரியும் உமாதேவி கணவர் மற்றும் மகளுடன் திருப்பதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது, திருவள்ளூரில் ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு சாலையை கடக்க நின்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் உமாதேவியின் 5 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவர் கெட்டியாக பிடித்துக்கொண்டதால் செயின் இரண்டாக அறுந்ததில் 3 சவரன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

இதில் காயமடைந்த உமாதேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments