நாற்காலியிலிருந்து விழுந்த குழந்தையை தூக்கிவிடாமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியை.. போலீசில் புகாரளித்த பெற்றோர்..!

0 1820
நாற்காலியிலிருந்து விழுந்த குழந்தையை தூக்கிவிடாமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியை.. போலீசில் புகாரளித்த பெற்றோர்..!

சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் மழலைகள் பள்ளியில் நாற்காலியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை அலட்சியமாக செயல்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படித்து வரும் 3 வயது குழந்தையை மற்றொரு குழந்தை நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டுள்ளது.

இதில் குழந்தை கீழே விழுந்ததை பார்த்தும், ஆசிரியை குழந்தையை தூக்கிவிடாமல் இருந்துள்ளார்.

வீட்டுக்குச் சென்ற குழந்தை பள்ளியில் தன்னை அடித்ததாக கூறிய நிலையில், குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பெற்றோர் கேட்ட போது பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படும் நிலையில், பள்ளி மீதும் ஆரிசியை மீதும் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments