சாக்கடை தண்ணீருடன் காங்கிரீட் போடும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ..!

0 6443
சாக்கடை தண்ணீருடன் காங்கிரீட் போடும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்.. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ..!

கரூர் மாநகராட்சி பகுதிகளில் அவசர கதியில் சாக்கடை தண்ணீருடன் காங்கிரிட் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1வது வார்டு பகுதியில் உள்ள கே.ஏ நகரில் சாக்கடை கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. சாக்கடையின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்டும் அதன் அடிப்பரப்பு அகுதியில் காங்கிரிட் தளம் அமைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று அங்கு வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அவசர கதியில் சாக்கடையின் அடிப்பகுதியில் காங்கிரிட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சாக்கடையில் ஓடும் கழிவு நீரை முழுவதுமாக அகற்றாமல் அப்படியே தள்ளிக் கொண்டு காங்கிரிட் கலவையை கொட்டி பணிகளை முடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments