பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்து அவரிடம் வாழ்த்துப் பெற்ற சிறுமிகள்..!

0 1165
பிரதமர் மோடிக்கு ராக்கி அணிவித்து அவரிடம் வாழ்த்துப் பெற்ற சிறுமிகள்..!

ரக்சா பந்தன் விழாவையொட்டித் தனக்கு ராக்கி அணிவித்த சிறுமியருக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு மூவண்ணக் கொடி வழங்கி வந்தே மாதரம் என முழக்கமிட்டார்.

பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு ராக்கி அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.

ரக்சா பந்தன் விழா முடிந்த பின், வீடுதோறும் மூவண்ணக் கொடி என்பதைக் குறிக்கும் வகையில் அங்கு வந்திருந்த சிறுமியர் அனைவருக்கும் பிரதமர் மோடி தேசியக் கொடியை வழங்கியதுடன் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments