அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

0 1644
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments