மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரத்து 269 கோடி ரூபாயை செலவிட மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரத்து 269 கோடி ரூபாயை செலவிட மகாராஷ்டிரா அரசு முடிவு
மும்பை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கூடுதலாக 10 ஆயிரத்து 269 கோடி ரூபாயை செலவிட புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மகாராஷ்டிர அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நிலத்தடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் பாதையின் மூன்றாவது வழித்தடத்திற்கான நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாததால் மெட்ரோ பாதைக்கான செலவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Comments