பட்டப்பகலில் அரிவாளுடன் சிலரை துரத்தி சென்ற திமுக கவுன்சிலரின் கணவர்

0 2032

திருச்சி மாவட்டம் தத்தமங்கலத்தில், பட்டப்பகலில் அரிவாளுடன் சிலரை துரத்தி சென்று வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்து சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தத்தமங்கலம் திமுக கவுன்சிலரான நித்யாவின் கணவர் வெற்றிச் செல்வனுக்கு, அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட சிலருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் வெற்றிச் செல்வனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெற்றிச் செல்வன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு அவர்களை வெட்டுவதற்காக துரத்தி சென்றார். இதனை சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments