சிவகளை அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கப்பொருள் கண்டுபிடிப்பு

0 9929

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகளையில் கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில், பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments