ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம்!

0 3533

ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாமுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

முகாமில் இருந்த மேலும் சில வீரர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலையில் நிகழ்ந்த தாக்குதலையடுத்து எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments