75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

0 1968

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

ரயில் நிலைய வளாகத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளனர். மோப்பநாய்கள் கொண்டு ரயில் நிலைய வளாகம் மற்றும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

வெடிகுண்டு நிபுணர்களும் முழுவீச்சில் ஆங்காங்கே சோதனை செய்து வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் முழுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments