ரஞ்சித் தொல்லை தாங்கல.. மாணவி திவ்யா எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சி..

0 5596

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு அருகே முன்னாள் காதலனின் மிரட்டலுக்கு பயந்து, கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சத்தியராஜ் இவரது மனைவி இந்திரா, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களது இரண்டாவது மகள் திவ்யா கல்லூரியில் பிஏ பட்டபடிப்பு முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்து வருகிறார்.இந்த நிலையில் சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்து உள்ளார். ஆரம்பித்தில் விரும்பிய திவ்யா, ரஞ்சித்தின் நடவடிக்கை பிடிக்காததால் காதலை முறித்துக் கொண்டார்.

அடங்காத ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும், செல்லும் வழியெல்லாம் பின்தொடர்ந்து சென்றும், திவ்யாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார் . திவ்யாவுடன் ஜோடி போல் இருப்பது போன்ற உருவாக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் பதிவிட்டு திவ்யாவின் வாழ்க்கையை கெடுத்துவிடுவதாகக் கூறி டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக பேசி சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடரவே ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் றோசன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் ரஞ்சித்திடம் சென்று தட்டி கேட்டுள்ளனர்.

ரஞ்சித் தனது மண்கடத்தல் கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர்களை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர்.

மீண்டும் ரஞ்சித் லவ்டார்ச்சர் கொடுத்ததால் மனமுடைந்து காணப்பட்ட திவ்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் திவ்யாவின் இறப்பிற்கு காரணமான நபரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திவ்யாவின் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து மார்த்தாண்டம் போலீசார், குழித்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக மாற்றினர் .

திவ்யாவின் செல்போனை கைப்பற்றி அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் 19 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக திவ்வியாவின் பெற்றோர், மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்களுக்கு பல உதவிகள் செய்து வந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வழக்கை திசை திருப்ப முயன்று வருகின்றனர் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments