மதுபோதையில் 'கூலிங் கிளாஸ்' தராத நண்பனை அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது

0 2379
மதுபோதையில் 'கூலிங் கிளாஸ்' தராத நண்பனை அடித்துக் கொன்ற சக நண்பர்கள் கைது

ஓசூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்ததாகக்கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரை அவரது நண்பர்களே அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

கடந்த சனிக்கிழமை, தேன்கனிக்கோட்டை நாகேஷ் லே அவுட் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்ததாகக்கூறி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில், இறந்துபோன சக்திவேல் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களுள் 2 பேர் சக்திவேல் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கேட்டதும், தர மறுத்ததால் அவரை பலமாகத் தாக்கியுள்ளதும் தெரியவந்தது.

மற்ற இரு நண்பர்களும் அப்ரூவராக மாற, சக்திவேலை அடித்தாகக் கூறப்படும் சேகர், வரதராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் காயமடைந்ததாகக்கூறி மருத்துவமனையில் அனுமதித்தது அம்பலம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments