ஹேண்ட் பிரேக் போடாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகர்ந்து சென்று விபத்து - 4 வயது சிறுவன் உயிரிழப்பு

0 2935
ஹேண்ட் பிரேக் போடாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகர்ந்து சென்று விபத்து - 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஹேண்ட் பிரேக் போடாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட தண்ணீர் லாரி, தானாக முன்னோக்கி சென்றபோது 4 வயது சிறுவன் மீது மோதி,முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழாவிற்காக தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்ட நிலையில், கோவில் அருகே ஹேண்ட் பிரேக் போடாமல் லாரியை ஓட்டுநர் கனகராஜ் நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, பாரம் தாங்காமல் திடீரென தண்ணீர் லாரி முன்னோக்கி வந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சக்திவேல் என்பவரது 4 வயது மகன் ரித்திஷ் மீது லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுநர் கனகராஜை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments