கோவையில் BMW சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

0 2088
கோவையில் BMW சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கோவையில் BMW சொகுசு காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சாய்பாபா காலனி மார்க்கெட் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக டெல்லி பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரில் கஞ்சாவுடன் பிடிபட்ட இருவரையும் விசாரணை செய்ததில் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், சொகுசு காரில் கஞ்சா கடத்தினால், போலீசாருக்கு சந்தேகம் வராதது என்ற நம்பிக்கையில் பெங்களூரு சென்று BMW காரை வாங்கிய இருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments