கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

0 1877
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சேலம் சீரகப்பாடி அரியலூர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அதில் ,கேரளாவில் இருந்து வந்து தங்கியுள்ள இளைஞர்கள் சிலர், பெங்களூரில் இருந்து மெத்தம் பேட்டமைன் என்ற உயர்ரக போதை மருந்தை வாங்கி வந்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார், 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், உயர் ரக பைக்குகளை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments