இந்தியா-சீனா எல்லையில் விமானப்படைகளுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த இரு நாடுகளும் திட்டம்

0 2424
இந்தியா-சீனா எல்லையில் விமானப்படைகளுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த இரு நாடுகளும் திட்டம்

இந்தியா-சீனா எல்லைகோட்டுக்கு அருகே பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வண்ணம், விமானப்படைகளுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

கடந்த வாரம் சுஷுல்-மால்டோ எல்லைபகுதியில் இரு நாட்டு இராணுவத்தினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில், சீன போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் எல்லையருகே இருமுறை பறந்தது குறித்து இந்திய தரப்பில் குறிப்பிடப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்தை தவிர்க்க புதிய அல்லது நடைமுறையில் உள்ள தொலைபேசி இணைப்பை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments