தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை..!

மேற்குத்திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
மேலும் தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.
Comments