கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!

0 2307

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்குக் காவிரியில் நொடிக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 96 ஆயிரத்து 344 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 41 ஆயிரத்து 438 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

 

தமிழகத்துக்குக் காவிரியில் நீர்வரத்து இன்று காலையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடித்தபடி ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்வதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 25ஆவது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு நொடிக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.  ஜூலை 12 முதல் இன்று வரை மேட்டூர் அணைக்கு 210 டிஎம்சி நீர் வந்துள்ள நிலையில், 150 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments