பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்.. போலீசார் விசாரணை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பேருந்தில் ஒலித்த பாடலை மாற்றாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடந்துள்ளது. ஆய்மழை கிராமத்திற்கு செல்லும் ஒரு மினி பேருந்தில் ஒலித்த திரைப்படப்பாடலை பயணி ஒருவர் ஓட்டுநரிடம் மாற்றுமாறு கூறியுள்ளார்.
இதற்கு ஓட்டுநர் மறுத்த நிலையில் அந்நபர் கீழே இறங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து மீண்டும் திரும்பி வந்த போது, அந்நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments