பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

0 4190

குழந்தை வரம் கேட்டுச்சென்ற பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக அரசியல் சாமியார் மிர்ச்சி பாபாவை போலீசார் கைது செய்தனர். சர்ச்சுக்கு வந்த சிறுமிகளிடம் எல்லை மீறிய பாதிரியார் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் பிரபல அரசியல் சாமியார் வைராக்கியானந்த் கிரி என்கிற மிர்ச்சி பாபா..! 2019 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அரசியல் சாமியாராக பிரபலமடைந்தார்.

சம்பவத்தன்று சாமியார் வைராக்கியானந்த் கிரியிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு சென்றுள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த நீரை தீர்த்தமாக கொடுத்த மிர்ச்சி பாபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் அந்த பெண்ணை மிரட்டி அனுப்பியுள்ளார். அந்த பெண், குழந்தை வரம் கேட்டு சென்ற இடத்தில் குட்டிச்சாத்தானால் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசில் புகாராக அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் மிர்ச்சி பாபா மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் சுற்றுவட்டார பகுதிகளான தோணித்துறை, வலைஏர்வாடி, மரவெட்டிவலசை மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றிவந்த ஜான் ராபர்ட் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை பூர்வீகமாக கொண்ட 46 வயதான பாதிரியார் ஜான் ராபர்ட், தேவாலயங்களுக்கு வந்து செல்லும் மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக , குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது

விசாரணையில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து , குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிரியார் ஜான் ராபர்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு இந்த இருவரின் கைது சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments