கோவிலுக்குள் திருடச் செல்வதற்கு முன் சுவாமியை வணங்கும் திருடன்.. சமூகவலைதளங்களில் வைரல்!

மத்தியப்பிரதேசத்தில் கோவிலுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் திருடச் செல்வதற்கு முன் அங்கிருக்கும் சுவாமியை வணங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 5ந்தேதி ஜபல்பூரில் உள்ள கோயில் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுகா கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த அந்த திருடன் திருடச் செல்வதற்கு முன் சுவாமியை இரு கரம் கூப்பி வணங்கி விட்டு பின்னர் அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் கோவில் மணிகளை திருடிச் சென்றுள்ளான்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments