பீகாரில் மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்.!

0 3092

ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார்.

பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்தும் விலகினார். தேஜஸ்வி யாதவ் உடன் ராப்ரி தேவியை அவரது இல்லத்தில் சந்தித்த நிதிஷ்குமார், புதிய கூட்டணி அரசு அமைக்க ஆதரவு கோரினார்.

பின்னர் பாட்னாவில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதிய கூட்டணியான, மகாபந்தன் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதன பின்னர் 160 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பஹூ சவுகானை மீண்டும் சந்தித்த நிதிஷ்குமார், புதிய கூட்டணி அரசு பதவியேற்க உரிமை கோரினார்.

ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாகப்

பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக நிதிஷ்குமாருக்கு கூறப்படுகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 எம்.எல்.ஏக்களும், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 79 எம்.எல்.ஏக்களும், காங்கிரசுக்கு 19 எம்.எல்.ஏக்களும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். 

இதனிடையே, ஆளுநரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் தற்போது அமைந்துள்ள மகாகத்பந்தன் கூட்டணியில் 7 கட்சிகளும், சுயேட்சைகளும் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அரசு பதவியேற்பது குறித்து ஆளுநர் தான் முடிவு செய்வார் என்றும் நிதிஷ்குமார் அப்போது குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். இதனிடையே புதன்கிழமை மாலை 4 மணிக்கு பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments