எச்சரிக்கையை மீறி வைகை ஆற்றில் குளித்த ராணுவ வீரர் உட்பட 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

0 2100
எச்சரிக்கையை மீறி வைகை ஆற்றில் குளித்த ராணுவ வீரர் உட்பட 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

மதுரை சோழவந்தான் அருகே எச்சரிக்கையை மீறி வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மாயமான 4 இளைஞர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்க வேண்டாம் என சுற்று வட்டார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எச்சரிக்கையை மீறி ஆற்றில் குளித்த அனுப்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.

தகவலறிந்து சென்ற போலீசாரும் தீயணைப்பு துறையினரும் இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், மேலக்கால் வைகை ஆற்றுப்பாலம் அருகே வினோத்குமார், அன்பரசன் ஆகிய 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களுள் ஒருவர் ராணுவ வீரர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments