ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லிய மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்.. களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது..!

0 3612
ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லிய மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்.. களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது..!

சென்னை தியாகராய நகரில் ஆக்கிரமிப்பை அகற்ற கூறிய மாநகராட்சி ஊழியரை தாக்கியதாக களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னைதியாகராய நகரில் உள்ள Smart City பிளாட்பாரத்தில் இருந்த களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸின்  விளம்பர போர்டை மாநகராட்சி ஊழியர் கண்ணன் எடுக்க சொன்னதாக கூறப்படுகிறது.

அப்போது மதுபோதையில் இருந்த களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அப்துல் கரீம், மாநகராட்சி ஊழியர் கண்ணனை அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல்  உள்ளிட்ட4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்துல் கரீமை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments