13 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் 3 வயது சிறுமி மீது மோதி விபத்து.. சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு..!

0 4865
13 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் 3 வயது சிறுமி மீது மோதி விபத்து.. சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

விஜயமாநகரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்ற போது  வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது வாகனம் மோதியது. இதில் படுகாயங்களுடன் துடி துடித்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இதனையடுத்து சிறுவன் மீதும், சட்ட நடைமுறைகளுக்கு எதிராக சிறுவனுக்கு  வாகனம் வழங்கிய அவரது தந்தை மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments