10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

0 2941
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!

மதுரை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கருப்பாயூரணி அருகேயுள்ள அரசு பள்ளியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன், 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அதனை வெளியே சொல்லக்கூடாது என ஆசிரியைகள் அமுதா மற்றும் அகிலா மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி,  1098 கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புக்கொண்டு குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததையடுத்து, 3 ஆசிரியர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments