கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் வெள்ளப்பெருக்கால் இடிந்து நீரில் மூழ்கியது..!

கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் வெள்ளப்பெருக்கால் இடிந்து நீரில் மூழ்கியது..!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய பாலத்தின் 17வது தூண் முற்றிலுமாக இடிந்து விழுந்து நீரில் மூழ்கியது.
திருவானைக் காவல் - சமயபுரம் டோல்கேட்டை இணைக்கும் வகையில் கடந்த 1928ம் ஆண்டு 24 தூண்களுடன் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அதனருகிலேயே சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு ரூ 3.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில் , தற்போது 17வது தூணும் இடிந்து விழுந்துள்ளது.
Comments